Saturday, December 6, 2008

ஏனோ?

ஏனோ? பொருனை நீர் சிந்திக்க தூண்டுவது ஏனோ?
மலர்கள் கறுப்பில் இல்லாதது ஏனோ?
காற்றில் செடிகள் ஆடுவது ஏனோ?
விண்மீன்கள் வெண்ணிற‌த்தில் இருந்தது ஏனோ?
பறவைகள் இரகசியங்கள் பாடுவது ஏனோ?
யாழின் இசை இனிப்பது ஏனோ?
உயிர‌ற்ற பொருட்கள் மீது மக்களின் நாட்டம் ஏனோ?
கற்களை கடவுள் என கூறுவது ஏனோ?
அக்ககற்களை அழகான கோவில்களில் வைப்பது ஏனோ?
கல்வி இருந்தும் அறிவு இல்லாதது ஏனோ?
மது மக்களை கவர்ந்த்து ஏனோ?
அதிலிருந்து விடுபடமுடியாதது ஏனோ?
விஷங்கள் உணவானது ஏனோ?
நல் உணவு கசக்கிறது என கூறுவது ஏனோ?
சிந்தனை அழிவது ஏனோ?
இளைஞனிடம் சுயந‌லம் ஏனோ?
மரங்களின் நிழல்கள் குறைவது ஏனோ?
பெண்களின் கூந்தலில் இயற்கையான மணம் ஏனோ?
காதல் ஏனோ? அதில் உருகும் மனம் ஏனோ?
சொல் ஏனோ? மொழி ஏனோ? அறிவு ஏனோ?
அதை பயன்படுத்த மறுக்கும் மனிதன் ஏனோ?
சாதி ஏனோ? மதம் ஏனோ?
அவை கொடுத்த அழிவு ஏனோ?
சுதந்திரம் சுதந்திரமாக அழிந்தது ஏனோ?
ஏனோ? இந்த சமுதாயம் சிந்திக்க மறந்தது ஏனோ?

No comments: